தமிழ்நாட்டில் இன்று 13,776 பேருக்கு கொரோனா உறுதி

0 3804
தமிழ்நாட்டில் இன்று 13,776 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில், ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, முதன்முறையாக 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னை, கோயம்புத்தூர், செங்கல்பட்டு, மதுரை, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பெருந்தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வண்ணம் உள்ளது. 

தமிழ்நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதன்படி, தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 13,776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்று பாதிப்பிலிருந்து, 8,078 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில், இணைநோய் இல்லாத 12 பேர் உட்பட 78 பேர் உயிரிழந்தனர். இந்த 78 பேரில், சென்னையில் மட்டும் 37 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். அண்மை நாட்களில் இதுவே அதிகமான கொரோனா உயிரிழப்பாகும். மேற்குவங்கத்திலிருந்து வந்த 28 பேர், பீகாரிலிருந்து வந்த 11 பேர் உட்பட வெளிமாநிலங்களிலிருந்து வந்த 44 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னை பெருநகரில், மேலும் 3,842 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 985 பேருக்கும், கோயம்புத்தூரில் 889 பேருக்கும் புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 807 பேருக்கும், மதுரையில் 502 பேருக்கும், திருநெல்வேலியில் 517 பேருக்கும், ஈரோட்டில் 331 பேருக்கும், திருச்சியில் 320 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

30 மாவட்டங்களில் மூன்று இலக்கத்தில் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. ஒரே நாளில், 12 வயதுக்குட்பட்ட 514 சிறுவர், சிறுமிகள் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஆளாகியுள்ளனர். சுகாதாரத்துறை அறிக்கையின்படி, 95,048 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments