உயிரோடிருந்த எனது தாயை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதாக அரசு மருத்துவமனை கொரோனா வார்டிலிருந்து வீடியோ பதிவிட்ட இளைஞர்

0 4008
உயிரோடு இருந்தபோதே தனது தாயை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதாக திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து இளைஞர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதலங்களில் பரப்பி விட்டுள்ளார்.

உயிரோடு இருந்தபோதே தனது தாயை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதாக திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து இளைஞர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதலங்களில் பரப்பி விட்டுள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி என்ற அந்தப் பெண் உயிரிழந்துவிட்டதாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தான் வந்து பார்த்தபோது தனது தாய்க்கு உயிர் இருந்ததாகவும் மருத்துவரை பார்க்க வேண்டும் என கேட்டபோது, அதற்கு செவிலியர்கள் அனுமதிக்கவில்லை என்றும் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார் முத்துலட்சுமியின் மகன் சுரேஷ்.

2 மருத்துவர்கள் முழுமையாக பரிசோதித்த பின்னரே முத்துலட்சுமியின் இறப்பை உறுதி செய்தனர் என்றும் முகக்கவசம் கூட அணியாமல் கொரோனா வார்டுக்குள் அத்துமீறி நுழைந்து மருத்துவர்களின் சேவையை கொச்சைப்படுத்தும் வகையில் வீடியோ பதிவிட்ட சுரேஷ் மீது புகாரளிக்கவுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments