நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு மகன் மறுத்ததால் தாய் தந்தையர் தூக்கிட்டு தற்கொலை

0 32224
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு மகன் மறுத்ததால், விரக்தியடைந்த தாய் தந்தையர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு மகன் மறுத்ததால், விரக்தியடைந்த தாய் தந்தையர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

இளம்பிள்ளை புளியம்பட்டி பகுதியில் வசிக்கும் விசைத்தறி தொழிலாளர்களான தங்கமணி - ரத்தனா தம்பதியரின் மகன் ராஜா அண்ணாமலை சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்த நிலையில், அவருக்கும், அழகப்பம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

அந்த பெண்ணுடன் அடிக்கடி செல்போனில் ராஜா பேசிவந்தபோது, வேறு ஒருவரை அந்த பெண் காதலிப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து எந்தவித காரணமும் கூறாமல் ராஜா திருமணத்தை நிறுத்தக் கூறியதால் விரக்தியடைந்த பெற்றோர் இருவரும் விபரீத முடிவை எடுத்ததாக தெரிகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments