நாடு முழுவதும் 70 சதவீத ரயில்கள் இயக்கப்படுகின்றன.. ரயில்வே வாரிய தலைவர்

0 698
நாடு முழுவதும் 70 சதவீத ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே வாரிய தலைவர் சுனீத் சர்மா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 70 சதவீத ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே வாரிய தலைவர் சுனீத் சர்மா தெரிவித்துள்ளார்.

நாள்தோறும் 1514 சிறப்பு ரயில்கள், 5387 புறநகர் ரயில்கள், 947 பயணிகள் ரயில்கள் இயக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். டெல்லி, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் எடுத்து வருவதற்காக ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க கோரிக்கை வைத்திருப்பதாக அவர் கூறினார்.

ஒடிசாவில் இருந்து அந்த  இரு மாநிலங்களுக்கும் ஆக்சிஜனை சிறப்பு ரயில்களில் அனுப்ப திட்டமிட்டு இருப்பதாகவும், ஒரு ரயில்வே டேங்கரில் 16 டன் ஆக்சிஜன் எடுத்து வர முடியும் என்றும் சுனீத் சர்மா தெரிவித்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments