பயணிகள் முன்பதிவு மையங்கள் ஏப்-25ல் இயங்காது - தெற்கு ரயில்வே

0 2410
பயணிகள் முன்பதிவு மையங்கள்,வரும் ஞாயிற்றுக்கிழமை இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பயணிகள் முன்பதிவு மையங்கள்,வரும் ஞாயிற்றுக்கிழமை இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் வரும் 25ம் தேதி முழு ஊரடங்கு அமலாக உள்ளது. இதனால் அன்றைய தினம் சென்னை கோட்டத்தின்கீழ் செயல்படும் ரயில் பயணிகள் முன்பதிவு மையங்கள் இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து செய்ய முன்பதிவு மையங்களை பயணிகள் அணுக வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

எனினும் அன்றைய தினம் பயணிப்பதற்காக பதிவு செய்யும் நடப்பு முன்பதிவு கவுண்டர்கள் வழக்கம் போல் செயல்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments