பிரதமருடனான உரையாடலை ஒளிபரப்பிய விவகாரத்தில் டெல்லி முதலமைச்சர் அலுவலகம் "வருத்தம்"

0 2952
பிரதமருடனான கலந்துரையாடல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான விவகாரம் தொடர்பாக, டெல்லி முதலமைச்சர் அலுவலகம், வருத்தம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக, அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தலைநகரில் உள்ள மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறையைத் தீர்க்காவிட்டால், பெருந்துயரகரமான நிகழ்வு ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது என்றார். ((எனவே, தயவுசெய்து பிரதமர் உடனடியாக தலையிட அவர் கோரினார். காணொலி மூலம் நடைபெற்ற)) இந்த தனிப்பட்ட கலந்துரையாடல், தொலைக்காட்சி ஊடாக ஒளிபரப்பானதற்கு, பிரதமர் சார்பில் மத்திய அரசு கடும் ஆட்சேபம் வெளியிட்டது. ((கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை வைத்து, அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் சித்து விளையாட்டுகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியது.)) ((இதற்கு பதிலளித்துள்ள டெல்லி முதல்வர் அலுவலகம், எந்தவொரு இரகசியம் இல்லாதபோது, பொதுவெளியில் ஒளிபரப்பானதில் எந்த தவறும் இல்லை என்று கூறியுள்ளது. ஒருவேளை,)) ஒளிபரப்பு விவகாரத்தால் யாருக்காவது அசெளகரியம் ஏற்படுமானால், அதற்காக வருத்தம் தெரிவிப்பதாக, டெல்லி முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமருடனான கலந்துரையாடல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான விவகாரம் தொடர்பாக, டெல்லி முதலமைச்சர் அலுவலகம், வருத்தம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக, அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தலைநகரில் உள்ள மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறையைத் தீர்க்காவிட்டால், பெருந்துயரகரமான நிகழ்வு ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.

இந்த தனிப்பட்ட கலந்துரையாடல், தொலைக்காட்சி ஊடாக ஒளிபரப்பானதற்கு, பிரதமர் சார்பில் மத்திய அரசு கடும் ஆட்சேபம் வெளியிட்டது. 

ஒளிபரப்பு விவகாரத்தால் யாருக்காவது அசெளகரியம் ஏற்படுமானால், அதற்காக வருத்தம் தெரிவிப்பதாக, டெல்லி முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments