2 வீடுகளை எழுதி வாங்கிக் கொண்டு உணவுதர மறுத்ததாக மனைவியை கொன்ற கணவன்..

0 3473
சேலத்தில் 2 வீடுகளை எழுதி வாங்கிக் கொண்டு உணவுதர மறுத்ததாக மனைவியைக் கத்தியால் குத்திக்கொன்ற கணவன் சரணடைந்துள்ளார்.

சேலத்தில் 2 வீடுகளை எழுதி வாங்கிக் கொண்டு உணவுதர மறுத்ததாக மனைவியைக் கத்தியால் குத்திக்கொன்ற கணவன் சரணடைந்துள்ளார்.

சேலம் வாய்க்கால் பட்டறையைச் சேர்ந்த பாஸ்கரன் பெயரில் இருந்த 2 வீடுகளை அவரது மனைவி கல்பனா 5 வருடங்களுக்கு முன்னர் எழுதி வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட தகராறில் கடந்த 5வருடமாக கணவர்  - மனைவி இடையே பேச்சுவார்ர்ததை இல்லை என்று சொல்லப்படுகிறது.

ஆனால் வீட்டின் மாடியில் வசித்து வந்த பாஸ்கரனுக்கு கல்பான உணவு மட்டும் வழங்கி வந்ததாகவும் கடந்த ஒரு வாரமாக உணவு வழங்காமல் இருந்ததாகக் கூறப்படும் நிலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பாஸ்கரன் கத்தியால் சரமாரியாகக் குத்தியதில் கல்பனா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்ட பாஸ்கரன் மனைவியைக் கத்தியால் குத்திக்கொன்றதாகத் கூறி சரண் அடைந்துள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments