ஆசிரியரிடமிருந்து ரூ.5லட்சம் வழிப்பறி செய்த கொள்ளையர்களை 24 மணிநேரத்தில் பிடித்த போலீசார்

0 898
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வங்கி வாசலில் ஆசிரியரின் கவனத்தை திசை திருப்பி சுமார் 5 லட்ச ரூபாயை பறித்துச் சென்ற கொள்ளையர்களை 24 மணிநேரத்தில் போலீசார் கைது செய்தனர்‍.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வங்கி வாசலில் ஆசிரியரின் கவனத்தை திசை திருப்பி சுமார் 5 லட்ச ரூபாயை பறித்துச் சென்ற கொள்ளையர்களை 24 மணிநேரத்தில் போலீசார் கைது செய்தனர்‍.

அரிச்சப்புரத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் வங்கியில் லோன் மூலமாக பெற்ற பணத்தை தனது இருசக்கர வாகனத்தின் முன்பக்க கவரில் வைத்துவிட்டு பைக்கை எடுத்துள்ளார்‍. அப்போது திடீரென அவரது முதுகில் தட்டி ஒருவன் கவனத்தை திசைதிருப்ப,மற்றொருவன் அந்த பணத்தை லாவகமாக அபகரித்துள்ளான்‍.

புகாரின் பேரில் வங்கி மற்றும் அந்த பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்த போலீசார்,ஹோண்டா யுனிகார்ன் பைக்கில் வந்த மர்மநபர்கள் கைவரிசை காட்டியதைக் கண்டறிந்தனர்‍.

பின்னர் அவர்களின் புகைப்படம் மற்றும் சிசிடிவி காட்சிகளை தொடந்து ஆய்வு செய்து, கீழப்பாலம் பகுதியில் பதுங்கியிருந்த ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த கொள்ளையர்கள கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments