எனது காதலியை சந்திக்க எந்த ஸ்டிக்கர் ஒட்டிச் செல்ல வேண்டும் என்று கேள்வி எழுப்பிய நபருக்கு நச்சென்று பதிலளித்த காவல்துறை

0 11750
மும்பையில், தனது காதலியை சந்திக்க எந்த ஸ்டிக்கர் ஒட்டிச் செல்ல வேண்டும் என்று கேள்வி எழுப்பிய நபருக்கு, காவல்துறை டிவிட்டரில் அளித்த பதிலுக்கு, ஆனந்த் மகிந்திரா, நடிகர் மாதவன் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்க வாகன போக்குவரத்து கட்டுப்பாடுகள் மும்பையில் அமலில் உள்ள நிலையில், அஸ்வின் வினோத் என்பவர் இந்த கேள்வியை கேட்டிருந்தார்.

அதற்கு, இந்த பிரச்சனை அவருக்கு அத்தியாவசியமானது என்பதை புரிந்து கொள்ள முடிவதாகவும், ஆனால், துரதிர்ஷ்டவசமாக தங்களது அத்தியாவசிய, அவசர பிரிவின் கீழ் இது வரவில்லை என்றும் மும்பை காவல்துறை டிவிட்டரில் பதிலளித்துள்ளது.

மேலும் பிரிவு என்பது நேசத்தை அதிகரிக்கும் என்றும், தற்போது அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்றும் நகைச்சுவையுடன் பதிவிட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments