கொரோனா எதிரொலி..! மதுரை விமான நிலையத்திலிருந்து செல்லும் விமானங்கள் ரத்து

0 5238
கொரோனா எதிரொலி..! மதுரை விமான நிலையத்திலிருந்து செல்லும் விமானங்கள் ரத்து

கொரோனா பரவல் எதிரொலியால் மதுரையிலிருந்து புறப்படும் விமானங்கள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன.

மதுரையிலிருந்து டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு நாள்தோறும் 10 விமானங்களும், சென்னைக்கு 6 விமானங்களும் இயக்கப்பட்டன. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பால், பயணிகள் வருகை குறைந்ததால் கடந்த சில நாட்களாக மதுரையிலிருந்து டெல்லி செல்லும் விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

தற்போது மதுரையிலிருந்து ஹைதராபாத் செல்லும் விமான சேவையும் மே ஒன்றாம் தேதிவரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மதுரையிலிருந்து சென்னைக்கு நாள்தோறும் மாலை செல்லும் தனியார் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் தற்போது மதுரையிலிருந்து மும்பை, பெங்களூருக்கு தலா ஒரு விமானமும், சென்னைக்கு 5 விமானங்களும் மட்டுமே இயக்கப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments