”மே 2ந் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கும், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்” -தலைமை தேர்தல் அதிகாரி

0 2712
”மே 2ந் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கும், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்” -தலைமை தேர்தல் அதிகாரி

மே 2ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, 8.30 மணிக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படத் தொடங்கும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்களின் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை தேவையா என்பது குறித்து ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் அவர் கூறியுள்ளார். 

ஆர்டிபிசிஆர் சோதனை 72 மணி நேரத்திற்கு முன் செய்யப்பட வேண்டும் என்பதால், மாவட்ட அளவில் தேர்தல் அலுவலர்கள் அனைத்து கட்சிகளுடனும் பேசி வருவதாகவும் சத்யபிரதா சாஹூ குறிப்பிட்டுள்ளார்.   

வாக்கு எண்ணிக்கை மேஜைகளை குறைப்பது பற்றி எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அதுதொடர்பாக எந்த ஒரு சுற்றறிக்கையையும் அனுப்பப்படவில்லை என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments