சென்னையில் புதிதாக 12 கொரோனா கண்காணிப்பு மையங்கள் அமைப்பு..! அறிகுறி குறைவாக உள்ளவர்களுக்கு சிகிச்சை, ஆலோசனை வழங்க ஏற்பாடு

0 1586
சென்னையில் புதிதாக 12 கொரோனா கண்காணிப்பு மையங்கள் அமைப்பு..! அறிகுறி குறைவாக உள்ளவர்களுக்கு சிகிச்சை, ஆலோசனை வழங்க ஏற்பாடு

சென்னையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 12 கொரோனா கண்காணிப்பு மையங்கள் மூலம் அறிகுறி குறைவாக உள்ளவர்கள் ஆலோசனை பெறலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ஈக்காட்டுதாங்கலில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், நோயின் தாக்கம் அதிகம் உள்ளவர்கள் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவார்கள் என கூறினார்.

கண்காணிப்பு மையங்கள் மூலம் 50 சதவீத தொற்று உள்ளோரை குணப்படுத்த முடியும் என நம்பப்படுவதாகவும் பிரகாஷ் தெரிவித்தார். சென்னையில் தற்போது 10,658 டோஸ் தடுப்பூசி மருந்துகள் உள்ளதாகவும், அதில், 2வது டோஸ் தடுப்பூசி போடுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments