பொது எதிரியான கொரோனாவை ஒழிக்க இணைந்து செயல்பட வேண்டும்..! இந்தியாவுக்கு ஆக்சிஜன் வழங்கி உதவத் தயார் -சீனா அறிவிப்பு

0 3046
பொது எதிரியான கொரோனாவை ஒழிக்க இணைந்து செயல்பட வேண்டும்..! இந்தியாவுக்கு ஆக்சிஜன் வழங்கி உதவத் தயார் -சீனா அறிவிப்பு

ந்தியாவுக்கு ஆக்சிஜன் வழங்கத் தயார் எனச் சீனா தெரிவித்துள்ள போதிலும், பிற நாடுகளில் இருந்து ஆக்சிஜன் வாங்கும் வழிகளை இந்தியா ஆராய்ந்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு முன் எப்போதும் இல்லா வகையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்குப் போதிய ஆக்சிஜன் இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியாவுக்கு வழங்கத் தயார் எனச் சீனா தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில் சீனாவைத் தவிர்த்துச் சிங்கப்பூர், வளைகுடா நாடுகள் ஆகியவற்றிடம் இருந்து ஆக்சிஜன் வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments