டெல்லி கங்காராம் மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 25 நோயாளிகள் உயிரிழப்பு, 60 பேர் கவலைக்கிடம்..!

0 2152
டெல்லி கங்காராம் மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 25 நோயாளிகள் உயிரிழப்பு, 60 பேர் கவலைக்கிடம்..! நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் உடனடியாக அனுப்பி வைப்பு

24 மணி நேரத்தில் 25 நோயாளிகள் உயிரிழப்பு, ஆக்சிஜன் பற்றாக்குறை என அவசர உதவி கேட்ட டெல்லி தனியார் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் டேங்கர்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

முன்னணி தனியார் மருத்துவமனைகளில் ஒன்றான, சர் கங்காராம் மருத்துவமனையில், 500-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்மருத்துவமனை இன்று காலை வெளியிட்ட அவசர அறிவிப்பில், மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்த 25 நோயாளிகள் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்திருப்பதாகவும், கையிருப்பு ஆக்சிஜன் இன்னும் 2 மணி நேரத்திற்கு மட்டுமே வரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், போதிய ஆக்சிஜன் கிடைக்கும் வரை புதிய நோயாளிகளை அனுமதிப்பதில்லை என மேக்ஸ் மருத்துவமனை அறிவித்தது. இவ்வாறு அறிவிப்பு வெளியிட்ட சற்று நேரத்தில் ஆக்சிஜன் ஏற்றிய டேங்கர் மருத்துவமனை வளாகத்துக்கு வந்து அங்குள்ள சிலிண்டர்களில் ஆக்சிஜனை நிரப்பியது. இதையடுத்துப் புதிய நோயாளிகளை அனுமதிப்பதில்லை என முன்பு அறிவித்ததை மேக்ஸ் மருத்துவமனை திரும்பப் பெற்றது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments