உலகளவிலேயே இதுவரை இல்லாத மேலும் ஒரு புதிய உச்சம்..! இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 3.32 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

0 3252
உலகளவிலேயே இதுவரை இல்லாத மேலும் ஒரு புதிய உச்சம்..! இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 3.32 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

லகளவிலேயே இதுவரை இல்லாத அளவாக இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு, 3 லட்சத்து 32 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நாள்தோறும் அதிகரித்து வரும் ஒரு நாள் கொரோனா பாதிப்பு, நேற்று முன்தினம் முதல் முறையாக உலகளவில் புதிய உச்சம் தொட்டது. இந்நிலையில் கடந்த 24 மணி நேர பாதிப்பு குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

ஒரே நாளில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 730 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 263 பேர் உயிரிழந்துள்ளனர். 1 லட்சத்து 93 ஆயிரத்து 279 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 24 லட்சத்து 28 ஆயிரத்து 616 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 13 கோடியே 54 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments