பாலிவுட் இசை இரட்டையர் நதீம் -ஷரவண் ஜோடியில் ஒருவரான ஷரவண் ரத்தோட் கொரோனாவால் காலமானார்

0 3574
பாலிவுட் இசை இரட்டையர் நதீம் -ஷரவண் ஜோடியில் ஒருவரான ஷரவண் ரத்தோட் கொரோனாவால் காலமானார்

பாலிவுட் இசை இரட்டையர் நதீம் -ஷரவண் ஜோடியில் ஒருவரான ஷரவண் ரத்தோட் மும்பையில் காலமானார். அவருக்கு வயது 67. 1990 களில் ஆஷிகி , சாஜன், பர்தேஸ் போன்ற பல இந்திப் படங்களில் சக்கை போடு போட்ட இசை ஜோடி நதீம் ஷரவண் ஜோடியாகும்.

சில நாட்களுக்கு முன்பு ஷரவணின் நெருங்கிய நண்பரான பாடலாசிரியர் சமீர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஷ்ரவணின் உடல் நிலை மோசமாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.இதய நோய், நுரையீரல் பாதிப்புகளால் சிகிச்சை பெற்று வந்த ஷ்ரவண் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.

டி சீரிஸ் குழுமத்தின் தலைவர் குல்சன் குமார் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இவரது கூட்டாளி நதீம் கான் தற்போது துபாயில் வாசனைத் திரவிய வியாபாரம் செய்து வருகிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments