ஒடிசாவில் இருந்து 20 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விசாகப்பட்டினத்திற்கு விநியோகம்..!

0 1295
ஒடிசாவில் இருந்து 20 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விசாகப்பட்டினத்திற்கு விநியோகம்

டிசா மாநிலம் அங்குல் பகுதியில் உள்ள ஆலைகளில் இருந்து ஆக்சிஜன் நிரப்பிய டேங்கர் லாரிகள் விசாகப்பட்டினத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுமார் 20 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் தெலுங்கானாவுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக ஒடிசா அரசு அறிவித்துள்ளது. இதனிடையே ஆக்சிஜன் ஏற்றிக் கொண்டு ரோரோ எக்ஸ்பிரஸ் ரயில் விசாகப்பட்டினத்தில் இருந்து நேற்றிரவு மும்பைக்குப் புறப்பட்டுச் சென்றது.

ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்கவும் விநியோகத்தை விரைவுபடுத்தவும் விமானப்படையுடன் ரயில்வேயையும் மத்திய அரசு பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments