கடும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டில் தவிக்கும் தலைநகரம்..! தனியார் மருத்துவமனைகளில் இருந்து கொரோனா நோயாளிகள் இடமாற்றம்

0 2909
கடும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டில் தவிக்கும் தலைநகரம்..! தனியார் மருத்துவமனைகளில் இருந்து கொரோனா நோயாளிகள் இடமாற்றம்

டெல்லியின் பல்வேறு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதால் கொரோனா பாதிப்புடைய மக்கள் வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

ஆகாஷ் ஹெல்த்கேர் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதே போல் வாரணாசியில் திருமூர்த்தி மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாத காரணமாக 9 நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதனிடையே போபாலில் உள்ள பேல் நிறுவனத்தின் வாசலில் எரிவாயு சிலிண்டர்களை நிரப்பிச் செல்ல நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர் .எரிவாயு சிலிண்டருடன் வந்தால்தான் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகள் அனுமதியளிப்பதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments