இரவுநேர ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்..! சொந்த ஊர்களுக்கு செல்லமுடியாமல் மக்கள் தவிப்பு

0 6417
இரவுநேர ஊரடங்கால் வெறிச்சோடிய சேலம் நகர சாலைகள்..! சொந்த ஊர்களுக்கு செல்லமுடியாமல் கரூர் பேருந்து நிலையத்தில் ஏராளமானோர் திரண்டனர்

கொரோனா பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் பல்வேறு நகரங்களில் முக்கிய சாலைகள் ஆள் அரவமின்றி காட்சி அளித்தன.

சேலத்தில் இரவு நேர ஊரடங்கு காரணமாக புதிய பேருந்து நிலையம், ஐந்து மற்றும் நான்கு ரோடு பகுதிகள், அழகாபுரம், ஏ.வி.ஆர். ரவுண்டானா உள்ளிட்ட சாலைகள் இருள் மையம் சூழ்ந்தன. மேலும் கூடுதல் காவலர்கள் பாதுகப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கரூர் நகர பகுதிகளில் ஊரடங்கு நெருங்கியும் பூட்டப்படாத கடைகளை நகராட்சி அதிகாரிகள் மூடினர். மேலும் பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் கிடைக்காததால் திரளான பொது மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் பரிதவிப்புக்கு ஆளாகினர்.

திருவாரூரில் இரவு நேர ஊரடங்கால் பகலில் பரபரப்பாக காட்சி அளிக்கும் முக்கிய வீதிகள் அமைதி பூண்டன. மேலும் ஊரடங்கு உத்தரவை மீறி அத்தியாவசிய பணிகள் தவிர்த்து வெளியே சுற்றியவர்களை பிடித்த போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments