18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மே 1 முதல் இலவச தடுப்பூசி..!

0 2214
18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மே 1 முதல் இலவச தடுப்பூசி..!

மிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மே ஒன்றாம் தேதி முதல் இலவச தடுப்பூசி போடுவதற்கு முகாம் நடைபெற இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.

தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து 100 சதவீதம் தடுப்பூசி வழங்க ஊக்குவிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி இலவசமாக தடுப்பூசி வழங்கும் பொருட்டு 18 முதல் 45 வயது வரை உள்ள அனைத்து கட்டிடத் தொழிலாளர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் அனைத்து மார்கெட் தொழிலாளர்கள், சில்லறை விற்பனை கடை வியாபாரிகள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஆட்டோ டாக்சி ஓட்டுனர்கள் ஆகியோருக்கு முன்னுரிமையில் இலவசமாக தடுப்பூசி வழங்க மே ஒன்றாம் தேதி முதல் முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும்,தமிழ்நாட்டில் அதிகம் பாதிப்படைந்த மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் இந்த முகாம்கள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments