"தமிழகத்தில் இனி தடுப்பூசி தட்டுப்பாடு இருக்காது" :சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

0 1413
"தமிழகத்தில் இனி தடுப்பூசி தட்டுப்பாடு இருக்காது" :சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

மிழகத்தில் இனி தடுப்பூசி தட்டுப்பாடு இருக்காது என்று சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், மே 1-ம் தேதிக்குப் பின் ஸ்புட்னிக் உள்ளிட்ட புதிய வகை தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வர உள்ளன என்றார். தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பரவலாக பிரித்து வழங்கப்படும் என்று கூறிய அவர், எந்த மருத்துவமனையில் எந்த தடுப்பூசி வழங்கப்படும் என்பதை வெளிப்படையாக மக்களுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளிடம், பணியாளர்கள் பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்த அவர், கொரோனா 2 ஆம் அலை பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் கட்டுக்குள் தான் இருக்கிறது என்றார்.

அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றாதவர்கள், தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள் என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments