எப்பவுமே இப்படித்தான்… அட்டாக் புள்ளிங்கோவின் அடாவடி வீடியோக்கள்..! பெண்ணை அடித்து இழுத்துச் சென்ற கொடுமை

0 7795
எப்பவுமே இப்படித்தான்… அட்டாக் புள்ளிங்கோவின் அடாவடி வீடியோக்கள்..! பெண்ணை அடித்து இழுத்துச் சென்ற கொடுமை

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் இரும்பு குழாயுடன் அடிதடியில் ஈடுபட்டு அட்டகாசம் செய்த ரவுடி புள்ளிங்கோ ஏற்கனவே ஒரு பெண்ணை அடித்து சாலையில் இழுத்து வந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் ஏற்பட்ட மோதலை காரணம் காட்டி இரும்புக்குழாயுடன் அட்டாகாசம் செய்த புள்ளிங்கோ, வெண்குடி கிராமத்தை சேர்ந்த கள்ளச்சராய வியாபாரி கணேசனின் மகன் பம்பை மணிகண்டன் என்பது தெரியவந்துள்ளது.

பம்பை முடியுடன் அரை போதையில் சுற்றும் மணிகண்டன் அந்த பகுதியில் அடிக்கடி அட்டகாசத்தில் ஈடுபடுவதை வாடிக்கையாக செய்து வந்துள்ளான். அம்பேத்கர் பிறந்த நாள் விழாவிலும் அப்படி வம்பு செய்ததால் அங்கிருந்த இளைஞர்கள் சிலர் தர்மஅடி கொடுத்துள்ளனர். அதற்கு பதிலடியாக அவர்களை இரும்பு குழாயுடன் தாக்கி அட்டகாசம் செய்துள்ளான் பம்பை மணிகண்டன்.

கடந்த வாரம் கள்ளச்சாராய விற்பனை குறித்து போலீசுக்கு ரகசிய தகவல் கொடுத்த கன்னியப்பன் என்பவரை போலீசார் போட்டுக் கொடுத்து விட, தந்தை கணேசனுடன் சேர்ந்து பம்பை மணிகண்டன் கன்னியப்பனின் மனைவி மற்றும் மாமியாரை சாலையில் வைத்து அடித்து உதைத்து கடுமையாக தாக்கியதாக கூறப்படுகின்றது

ஒரு கட்டத்தில் அவனது தந்தையும், உறவினர் கலையரசியும் சேர்ந்து கன்னியப்பனின் மனைவியை அடித்து உதைக்க, கன்னியப்பனின் மாமியாரை சரமாரியாக தாக்கி தலைமுடியை பிடித்து தர தரவென சாலையில் இழுத்து வந்து கொடுமை செய்துள்ளான் பம்பை மணிகண்டன்

இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ ஆதரத்துடன் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் கண்களை மாமூல் மறைத்ததால் அவன் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டுள்ளனர். இந்த நிலையில் வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் போட்ட ஆட்டத்தால் பம்பை மணிகண்டன், உயர் அதிகாரிகளின் கண்ணில் பட்டதால், வேறு வழியின்றி அவசர அவசரமாக வாலாஜாபாத் காவல் துறையினர் மணிகண்டனை கைது செய்துள்ளனர்

பல்வேறு அடிதடி வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் ரவுடி பம்பை மணிகண்டன் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்க் கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்ரியா சிபாரிசு செய்துள்ளார்.

சமூகத்தில் பம்பை மணிகண்டன் போன்ற ரவுடிகளை காவல்துறையினர் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் அதே நேரத்தில் பம்பை மணிகண்டன் மீது நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருந்த உள்ளூர் காவல் துறையினர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதும் காலத்தின் கட்டாயம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments