"ஸ்புட்னிக் தடுப்பூசி மே மாத இறுதியில் தான் இந்தியாவிற்கு வரும்" -டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் தகவல்

0 1242
"ஸ்புட்னிக் தடுப்பூசி மே மாத இறுதியில் தான் இந்தியாவிற்கு வரும்" -டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் தகவல்

ஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி, மே மாத இறுதியில் தான் இந்தியாவிற்கு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

அந்த தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்ததை அடுத்து, ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்து, டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் விற்பனை செய்ய இருக்கிறது.

இது தொடர்பாக பேசிய அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், முதல் கட்ட தடுப்பூசிகளை ஜூன் மாதத்திற்குள் இறக்குமதி செய்வதற்கு திட்டமிட்டு செயலாற்றி வருவதாகவும், குறிப்பாக மே மாத இறுதிக்குள் கொண்டு வர முயற்சித்து வருவதாகவும் கூறினார்.

இரண்டாவது காலாண்டில் இருந்து இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசி கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments