தமிழகத்தில் 12 ஆயிரத்தை தாண்டியது கொரோனா தொற்று..! இன்று ஒரே நாளில் 53 பேர் உயிரிழப்பு

0 2735
தமிழகத்தில் 12 ஆயிரத்தை தாண்டியது கொரோனா தொற்று..! இன்று ஒரே நாளில் 53 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில், ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 12 ஆயிரத்தை கடந்துள்ளது.

தமிழ்நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதன்படி, தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 12,652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்று பாதிப்பிலிருந்து, 7526 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில், நாகையை சேர்ந்த 102 வயது மூதாட்டி உள்பட 59 பேர் உயிரிழந்தனர். இந்த 59 பேரில், சென்னையில் மட்டும் 24 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். மேற்கு வங்கம், கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்து வந்த 36 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னை பெருநகரில், மேலும் 3789 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 906 பேருக்கும், கோயம்புத்தூரில் 689 பேருக்கும் புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 510 பேருக்கும், மதுரையில் 495 பேருக்கும், திருச்சியில் 359 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அறிக்கையின்படி, 89,428 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments