சென்னை தலைமை செயலகத்தில் முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் - பொதுத்துறை முதன்மை செயலாளர்

0 1433
சென்னை தலைமை செயலக வளாகத்தில் தனிமனித இடைவெளியை பின்பற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமை செயலக வளாகத்தில் தனிமனித இடைவெளியை பின்பற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள உத்தரவில், தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின்படி முககவசம் அணியாமல் இருப்பது, பொது இடங்களில் எச்சில் துப்புவது ஆகியவை தவறான பழக்கவழக்கமாகும் என்று கூறப்பட்டுள்ளது.

தலைமை செயலக வளாகத்தில் எச்சில் துப்பினாலும், தனி மனித இடைவெளியை பின்பற்றாமல் சென்றாலும் 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றும், முககவசம் அணியாமல் சென்றால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments