கொரோனா தடுப்பு நடவடிக்கை.. மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

0 2325
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தேசிய அளவிலான ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்குவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தேசிய அளவிலான ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்குவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவ ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பல்வேறு மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக டெல்லி, மும்பை, சிக்கிம், ஒடிசா, கொல்கத்தா, அலகாபாத் ஆகிய 6 உயர்நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், மத்திய அரசு பிச்சை எடுக்குமோ, திருடுமோ, கடன் வாங்குமோ எதையாவது செய்து மாநில அரசுகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த பிரச்சனையை தானாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்று உள்ளது.

தலைமை நீதிபதி பாப்டே, நீதிபதிகள் ரவீந்திர பாட், நாகேஷ்வர ராவ் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்ற போது, நாடு இப்போது நெருக்கடி நிலை போன்ற ஒரு சூழலை எதிர்கொண்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். கொரோனா தொற்றை எதிர்க்க மத்திய அரசு என்ன திட்டம் வைத்துள்ளது என்பதை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், நாடு தழுவிய தடுப்பூசி திட்டம் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

ஆறு உயர்நீதிமன்றங்களில் இது தொடர்பான வழக்குகள் நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த வழக்குகளால் குழப்பமான நிலை உருவாகி உள்ளது என்றனர். ஆக்சிஜன் வினியோகம், அத்தியாவசிய மருந்து வினியோகம், தடுப்பூசி போடும் முறை, பொது முடக்கத்தை அறிவிக்கும் அதிகாரம் ஆகிய நான்கு அம்சங்கள் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மூத்த வழக்கறிஞரான ஹரீஸ் சால்வேயை இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவ நியமிப்பதாக நீதிபதிகள் தெரிவித்து, வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments