2 தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தம் - ஜாகுவார் லேண்ட் ரோவர் அறிவிப்பு

0 1280
2 தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தம் - ஜாகுவார் லேண்ட் ரோவர் அறிவிப்பு

கொரோனா பரவல் காரணமாக செமி கன்டக்டர் சிப் உள்ளிட்ட உற்பத்திக்கான முக்கிய மூலப்பொருட்களின் வினியோகம் தடைப்பட்டுள்ளதால் வரும் திங்கட்கிழமை முதல் இங்கிலாந்தில் உள்ள இரண்டு தொழிற்சாலைகளில் கார் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்துவதாக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் அறிவித்துள்ளது.

டாடா மோட்டார்ஸ்க்கு சொந்தமான இந்நிறுவனத்திற்கு Castle Bromwich மற்றும் Halewood ஆகிய இடங்களில் தொழிற்சாலைகள் உள்ள நிலையில், அங்கு உற்பத்தி நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, Solihull நகரிலுள்ள தொழிற்சாலையில் தொடர்ந்து உற்பத்தி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments