ஆக்சிஜன் தட்டுபாட்டை போக்க உடனடி நடவடிக்கை - பிரதமர் மோடி

0 1930
மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் தயாரிப்பு மற்றும் வினியோகத்தை துரிதப்படுத்தி, தடையின்றி மாநிலங்களுக்கு வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் தயாரிப்பு மற்றும் வினியோகத்தை துரிதப்படுத்தி, தடையின்றி மாநிலங்களுக்கு வழங்க பிரதமர்  மோடி உத்தரவிட்டுள்ளார். 

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து, ஆக்சிஜன் பயன்பாட்டுக்கான தேவை உயர்ந்து வருவதால், பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆலோசிக்க பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் டெல்லியில் உயர்மட்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது. உள்துறை, அமைச்சரவை செயலாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். கடந்த சில வாரங்களாக ஆக்சிஜன் வினியோகத்தை அதிகரிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள், பிரதமருக்கு விளக்கம் அளித்தனர்.

20 மாநிலங்களுக்கு 6785 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒரு நாளைக்கு தேவைப்படும் நிலையில், புதன்கிழமை முதல் தினமும் 6822 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கி இருப்பதாக அதிகாரிகள் எடுத்துரைத்தனர். ஆக்சிஜன் தயாரிப்பாளர்களின் பங்களிப்புடன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி அளவு நாளொன்றுக்கு 3300 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டுள்தை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பது, வினியோகத்தை விரைந்து மேற்கொள்வது, ஆக்சிஜன் பயன்பாட்டில் புதிய வழிமுறைகளை கையாள்வது என பல்வேறு நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் உத்தரவிட்டார்.

மாநிலங்களுக்கு ஆக்சிஜன் சப்ளை முறையாகவும், தடையின்றியும் நடைபெற வேண்டுமென அவர் கூறினார். ஆக்சிஜன் கொண்டு செல்லும் லாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

மிக விரைவாக ஆக்சிஜனை கொண்டு செல்லும் வழிமுறைகளை பின் பற்ற வேண்டும் என்றும், இடை நில்லா ரயில்கள் மூலம் ஆக்சிஜனை மாநிலங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் கட்டளை இட்டார். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து வெள்ளிக்கிழமை அன்று ஆலோசனை நடத்த உள்ளதாகவும், இதனால் மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்வதாகவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments