ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவினரா? தம்மிடம் ஆதாரம் இல்லை என ரஜினி பதில்

0 4621
தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதற்கு தம்மிடம் எந்த ஆதாரமும் இல்லை என விசாரணை ஆணையத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார்.

தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதற்கு தம்மிடம் எந்த ஆதாரமும் இல்லை என விசாரணை ஆணையத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து, அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை கமிஷன், விசாரணை நடத்தி வருகிறது.  தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதே துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம் என ரஜினி கூறியிருந்ததால், அது குறித்து விளக்கம் அளிக்குமாறு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது.

இரு முறை சம்மன் அனுப்பியும் ரஜினி ஆஜராகாத நிலையில், விசாரணை ஆணையத்தின் 15 கேள்விகளுக்கு எழுத்துபூர்வமாக வழக்கறிஞர் மூலம் பதிலளித்துள்ளார். 

தாம் கருத்துத் தெரிவித்த தூத்துக்குடி பத்திரிக்கையாளர் சந்திப்பு தற்செயலாக நடந்த ஒன்று என்றும், அப்போது ஆதாரங்களின் அடிப்படையில் தாம் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் கைப்பட எழுதிய கடிதத்தில் ரஜினி கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments