இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் லாபநோக்கமின்றி பங்கேற்க தயார் - ஃபைசர் ஆர்வம்

0 1025
இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் லாபநோக்கமின்றி பங்கேற்க தயார் என அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைசர் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் லாபநோக்கமின்றி பங்கேற்க தயார் என அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைசர் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பைசரின் தடுப்பூசிகள் விலை அதிகமானவை ஆகும்.

அமெரிக்காவில் பைசரின் ஒரு டோஸ் தடுப்பூசி சுமார் 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனாலும்,உலகில் அனைவருக்கும் அது கிடைக்கவேண்டும் என்பதற்காக ஏழை, நடுத்தர நாடுகளுக்கு குறைந்த விலையை நிர்ணயித்துள்ளதாக பைசர் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் இருப்பதால் ஜான்சன்&ஜான்சன், பைசர், மாடர்னா ஆகிய வெளிநாட்டு நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு அதிவிரைவு கொள்முதல் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments