ஸ்புட்னிக்-வி தடுப்பூசி டோஸ் ஒன்றுக்கு ரூ.750 க்கு விற்கப்பட வாய்ப்பு - டாக்டர் ரெட்டிஸ் லேப்

0 1286
ஸ்புட்னிக்-வி தடுப்பூசி டோஸ் ஒன்றுக்கு 750 ரூபாய் என்ற விலையில் விற்கப்படலாம் என இந்தியாவில் அதன் தயாரிப்பாளரான டாக்டர் ரெட்டிஸ் லேப் தெரிவித்துள்ளது.

ஸ்புட்னிக்-வி தடுப்பூசி டோஸ் ஒன்றுக்கு 750 ரூபாய் என்ற விலையில் விற்கப்படலாம் என இந்தியாவில் அதன் தயாரிப்பாளரான டாக்டர் ரெட்டிஸ் லேப் தெரிவித்துள்ளது.

தற்போது ரஷ்யாவில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டுமே அது வழங்கப்படும்.

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் சர்வதேச விலை டோஸ் ஒன்றுக்கு 10 டாலர் என்பதால் அதன் அடிப்படையில் இந்தியாவில் 750 ரூபாய்க்கு விற்கப்பட வாய்ப்புள்ளதாகவும் ஆனால் விலை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று ரெட்டிஸ் லேப் தெரிவித்துள்ளது.

விரைவில் இந்தியாவிலேயே உற்பத்தி துவங்கிய பின்னர் உள்நாட்டு சந்தை மதிப்புக்கு ஏற்ற வகையில் இந்த விலை குறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments