போட்டி நிறுவன செயலிகளை முடக்கும் நடவடிக்கையா? ஆப்பிள்,கூகுள் நிறுவனங்களிடம் அமெரிக்க செனட் எம்பிக்கள் விசாரணை

0 1401

மொபைல் ஆப் ஸ்டோர்களில் போட்டி நிறுவனங்களின் செயலிகளை ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் பின்னுக்குத் தள்ளுவதாக கூறப்படும் புகார் குறித்து அமெரிக்க செனட் சபை எம்பிக்கள் விசாரணை நடத்தினர்.

தங்களது சொந்த செயலிகளுக்கு போட்டியாக அமைந்து விடும் என்ற எண்ணத்தில் சிறு நிறுவனங்களின் செயலிகளை இந்த இரண்டு நிறுவனங்களும் முடக்கி வருமானத்தை தடுக்க நினைக்கின்றனவா என அவற்றின் அதிகாரிகளிடம் செனட்டர்கள் சரமாரி கேள்வி எழுப்பினர்.

இசை செயலியை வழங்கும் Spotify Technology SA நிறுவனம் மற்றும் டேட்டிங் சேவையை நடத்தும் Match Group ஆகியன இது தொடர்பாக ஆப்பிள் மற்றும் கூகுள் மீது புகார்களை தெரிவித்துள்ளன.

செனட்டர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஆப்பிள் மற்றும் கூகுள் அதிகாரிகள் ஆபத்தான செயலிகளிடம் இருந்து வாடிக்கையாளர்களை காக்கும் பொறுப்பு தங்களுக்கு இருப்பதாக கூறி தங்கள் தரப்பை நியாயப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments