அடுத்த 48 மணி நேரத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு துவங்கும் என அறிவிப்பு

0 2219
அடுத்த 48 மணி நேரத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு துவங்கும் என அறிவிப்பு

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு அடுத்த 48 மணி நேரத்தில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை அமெரிக்காவையும் தாண்டி உச்சத்தை நோக்கி சென்றுள்ளது. எனவே 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் வரும் ஒன்றாம் தேதி முதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி வரும் சனிக்கிழமை முதல் கோவின் இணையதளத்தில் அதற்கான முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தடுப்பூசி விதிகளின் படி, மாநில அரசுகளும், தனியார் மருத்துவமனைகளும் தயாரிப்பாளர்களிடம் இருந்து நேரடியாக பெற்று மக்களுக்கு போடலாம். ((vgfx out)) முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments