நாட்டின் நான்காவது தடுப்பூசி வரும் ஆகஸ்டில் பயன்பாட்டுக்கு வரும்-நிதி ஆயோக்

0 2158

நாட்டின் நான்காவது கொரோனா தடுப்பூசி வரும் ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது என நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் பால் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் உள்ள பயாலஜிகல்-இ நிறுவனத்தின் இந்த தடுப்பூசியின் முதல் இரண்டு கட்ட சோதனைகள் முடிந்து அதன் தரவுகள் மத்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் விரைவில் தாக்கல் செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

மத்திய அரசின் பயோடெக்னாலஜி துறையுடன் சேர்ந்து உருவாக்கப்படும் இந்த தடுப்பூசியின் 3 ஆம் கட்ட சோதனைகள் உடனடியாக துவங்கும் என்றும் அவர் கூறினார். ஏற்னவே கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கும் மத்திய அரசு அண்மையில் அவசரகால பயன்பாட்டுக்கான ஒப்புதலை வழங்கியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments