அரசுக்கு மனித உயிர்கள் ஒரு பொருட்டே இல்லை என்பதை அதன் செயல்பாடுகள் காட்டுகிறது: டெல்லி உயர்நீதிமன்றம் அதிருப்தி

0 1942

அரசுக்கு மனித உயிர்கள் ஒரு பொருட்டே இல்லை என்பதை அதன் செயல்பாடுகள் காட்டுவதாக டெல்லி உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவது தொடர்பாக மேக்ஸ் மருத்துவமனை தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கள நிலவரத்தை அறிந்து அரசு விழித்திருக்க வேண்டாமா? என வினவினர். நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் ஆக்சிஜனை மருத்துவமனைகளுக்கு வழங்காமல் தொழிற்சாலைப் பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதிப்பது, அதை ஏளனம் செய்வதாகும் எனக் குறிப்பிட்டனர்.

மக்கள் செத்துக் கொண்டிருக்கும்போது தொழில்களைப் பற்றி அரசு கவலைப்படுவதாகவும், அரசுக்கு மனித உயிர்கள் ஒரு பொருட்டே இல்லை என்பதையே இது காட்டுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments