கோவாக்சின் தடுப்பூசி போட்ட பத்தாயிரத்தில் 4 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை

0 2129

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோரில் பத்தாயிரத்தில் 4 பேருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதில் கோவாக்சின் தடுப்பூசியை முதல் டோஸ் போட்டுக் கொண்ட 93 லட்சத்து 56 ஆயிரத்து 436 பேரில் 4208 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்றியுள்ளது. இரண்டு தவணை கோவாக்சின் போட்டுக்கொண்ட 17 லட்சத்து 37 ஆயிரத்து 178 பேரில்  698 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்றியுள்ளது.

இதிலிருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டோரில் பத்தாயிரத்தில் 4 பேர் தான் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளது தெரியவந்துள்ளது. இதேபோல் கோவிஷீல்டு தடுப்பூசி முதல் தவணை போட்டுக்கொண்டோரில் பத்தாயிரத்தில் இருவரும், இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டோரில் பத்தாயிரத்தில் மூவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments