சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ரஷ்யா விலக முடிவு

0 2958

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தனது பங்களிப்பை நிறுத்திக் கொள்ள ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 16 நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை கடந்த 1998ம் ஆண்டு முதல் இயக்கி வருகின்றன. இந்நிலையில் 2030ம் ஆண்டுக்குள் சொந்தமாகவே விண்வெளி ஆய்வு மையத்தைத் தொடங்கத் திட்டமிள்ளது. 

இதனால் அதற்கு முன்னதாகவே 2025ம் ஆண்டு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெளியேறப் போவதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு மையமான ரோஸ்கோஸ்மோசின் தலைவர் டிமிட்ரி ரோகோசின் தெரிவித்துள்ளார். புதிய விண்வெளி ஆய்வு மையத்தில் நுண்ணறிவு ரோபோக்கள் பயன்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments