ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழப்பதை வேடிக்கை பார்க்க முடியாது - டெல்லி உயர்நீதிமன்றம்

0 1273
ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழப்பதை வேடிக்கை பார்க்க முடியாது - டெல்லி உயர்நீதிமன்றம்

ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக மக்கள் உயிரிழப்பதை வேடிக்கைப் பார்க்க முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தேவையான ஆக்சிஜனை மருத்துவமனைகளுக்குத் தரவேண்டியது அரசின் பொறுப்பு என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாக்ஸ் மருத்துவமனையில் 8 மணி நேரத்திற்கு தேவையான ஆக்சிஜன் மட்டுமே இருப்பதாக குறிப்பிட்டு அவசர வழக்காக விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம் மத்திய அரசுத் தரப்பில் பதிலை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து அடுத்த சில மணி நேரங்களில் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வழங்கப்படும் என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் உறுதியளித்தார். மத்திய அரசு தேவையான ஆக்சிஜனை தட்டுப்பாடு நிலவும் மருத்துவமனைகளுக்கு தரும் என நம்பிக்கை இருப்பதாக கூறிய டெல்லி உயர் நீதிமன்றம், ஆக்சிஜன் தட்டுப்பாடு நீடிக்கும் நிலையில் தேசிய அவசர நிலையாக மத்திய அரசு அறிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments