டெல்லியில் கொரோனா பரிசோதனை செய்வதில் சிக்கல்

0 1339

டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அங்குள்ள பெரும்பாலான தனியார் ஆய்வகங்கள் பெருந்தொற்று சோதனையை நிறுத்தி வைத்துள்ளன.

ஐசிஎம்ஆர் வழிகாட்டுதலின்படி சோதனை நடத்தப்பட்டு அதன் முடிவுகள் 24 மணி நேரத்திற்குள் பதிவேற்றப்படவேண்டும். ஆனால் மனித ஆற்றல் பற்றாக்குறை மற்றும் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கானோருக்கு சோதனை செய்தல்  காரணமாக 24 மணி நேரத்திற்குள் ஆய்வு முடிவுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள ஆய்வகங்கள் 2 முதல் 3 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன. இதனால் புதிதாக தொற்று ஏற்பட்டவர்களை கண்டறிவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments