தமிழகத்தில் மே 2 ஆம் தேதி நள்ளிரவுக்குள் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்க ஏற்பாடு: சத்ய பிரதா சாகு

0 2431

மே 2 ஆம் தேதி நள்ளிரவுக்குள் அனைத்து வாக்கு எண்ணிக்கை முடிவுகளும் வெளியாகும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கைக்கு மேசை அமைக்கும் போது இடைவெளி சாத்தியமா, ஒரு தொகுதிக்கான வாக்குகளை எண்ண எத்தனை மேஜைகள் அமைப்பது, அறையின் அளவு, வாக்காளர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கவனத்தில் கொள்வது குறித்து  மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறுவதாக அவர் கூறினார். 

மே மாதம் 2 ஆம் தேதி இரவு 12 மணிக்குள்ளாக வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க திட்டமிட்டு வருவதாகவும் சத்யபிரதா சாஹு குறிப்பிட்டார். வாக்கு எண்ணிக்கை அன்று ஊரடங்கு தளர்வு தொடர்பாக ஆலோசிக்கப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர், தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் ஸ்டார்ங் ரூமில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக அறிக்கை பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments