மகாராஷ்டிராவில் பொதுமுடக்கத்திற்கு நிகரான கட்டுப்பாடு இன்றுமுதல் அமல்

0 2538
மகாராஷ்டிராவில் பொதுமுடக்கத்திற்கு நிகரான கட்டுப்பாடு இன்றுமுதல் அமல்

மகாராஷ்ட்ராவில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடு இன்று இரவு எட்டு மணி முதல் அமலுக்கு வருகிறது.

மே 1 ம் தேதி காலை 7 மணி வரை இந்தக் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்படி திருமண நிகழ்ச்சிகள் 2 மணி நேரமே நடைபெற வேண்டும். அதில் 25 பேருக்கு மேல் கூடக் கூடாது, நகருக்கு உள்ளும் வெளியேயும் பொது போக்குவரத்தை மருத்துவமனை செல்ல, ஈமச்சடங்கில் பங்கேற்க என அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும், பேருந்துகளில் நின்று பயணிக்க அனுமதி இல்லை.

ரேசன், மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகளை காலை 7 மணி முதல் 11 மணி வரை நான்கு மணி நேரமே திறக்க வேண்டும், அரசு அலுவலகங்களில் 15 சதவீதம் பேர் மட்டும் பணிக்கு வரவேண்டும்,  இதே போல் தனியார் நிறுவனங்களும் வீட்டில் இருந்து பணிபுரிய ஊக்கம் அளித்து அலுவலகம் வருவோரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விதிகளை மீறுவோரிடம் பத்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் மகாராஷ்ட்ரா அரசு எச்சரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments