கடலூர் ஏ.டி.எஸ்.பிக்கு மாஸ்க் கிடையாதா ? வாக்கு சாவடியில் அடாவடி

0 5685
கடலூர் ஏ.டி.எஸ்.பிக்கு மாஸ்க் கிடையாதா ? வாக்கு சாவடியில் அடாவடி

வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்புபணியில் இருந்த ஏ.டி.எஸ்.பி ஒருவர் முககவசம் இல்லாமல் அரசியல் கட்சியினர் மற்றும் செய்தியாளரிடம் அடாவடியாக பேசியதாக புகார் எழுந்துள்ளது

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முககவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கலைகல்லூரி வாக்குச்சாவடியை அதிமுக வேட்பாளர்களான அருண்மொழித்தேவன், பாண்டியன் உள்ளிட்டோர் முறையான அடையாள அட்டையுடன் பார்வையிடச்சென்றனர். அப்போது அவர்களை மடக்கிய முககவசம் இல்லா ஏ.டி.எஸ்.பி சரவணக்குமார் என்பவர் தான் கறாரான ஆபீசர் என்று அவர்களிடம் கெடுபிடியாக நடந்து கொண்டார்

4 பேரை மட்டுமே அனுமதிக்க முடியும் எனகூறி மற்றவர்களை வெளியே அனுப்பிய ஏ.டி.எஸ்.பி சரவணக்குமார் , வாக்குசாவடி மையத்தை பார்வையிடச் சென்றவர்களை வாசலில் நின்று படம் எடுத்துக் கொண்டிருந்த பத்திரிக்கையாளர்களை, ஏக வசனத்தில் வெளியே போகச்சொல்லி விரட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

இதையடுத்து ஒருமையில் பேசி விரட்டிய ஏ.டி.எஸ்.பி யை கண்டித்து வாக்கு சாவடி மைய வாசலில் அமர்ந்து செய்தியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் தங்களை ரிமாண்ட் செய்யக்கூறி செய்தியாளர்கள் உரக்க குரல் எழுப்பியதால் நிலைமை விபரீதமாவதை உணர்ந்து சக போலீஸ் அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். இதையடுத்து சத்தத்தை குறைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார் அந்த கறார் ஏ.டி.எஸ்.பி

அங்கிருந்த அனைவரும் முக கவசம் அணிந்திருந்த நிலையில் அரசின் உத்தரவை மதிக்காமல், கல்லூரி வாசலில் முககவசம் இன்றி உரக்க சத்தமிட்டுக் கொண்டிருந்த ஏ.டி.எஸ்.பி சரவணக்குமாரிடம் முக கவசம் அணியாததற்கு யார் அபராதம் வசூலிப்பார்கள் ? என்பதே அந்த காட்சிகளை பார்க்கின்ற சாமானியர்களின் கேள்வியாக இருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments