இறுதிவரை பரபரப்பு.... கொல்கத்தா அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி த்ரில் வெற்றி!

0 4510
கொல்கத்தா அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி த்ரில் வெற்றி!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான டூ பிளஸ்சிஸ் 95 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 64 ரன்களும் விளாசினர்.

தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணி 31ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. தினேஷ் கார்த்திக் 40 ரன்களும், ரஸ்செல் 54 ரன்களும், பேட் கம்மின்ஸ் 66 ரன்களும் எடுத்து ஸ்கோரை உயர்த்தினர். ஆயினும், 19 புள்ளி 1 ஓவர்களில் அந்த அணியால் 202 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments