பிரான்சில் இருந்து மேலும் 4 ரபேல் விமானங்கள் இந்தியா வருகை

0 1773
பிரான்சில் இருந்து மேலும் 4 ரபேல் விமானங்கள் இந்தியா வருகை

இந்தியாவுக்கு 5வது தவணையாக ரபேல் விமானங்களை பிரான்ஸ் அனுப்பி வைத்துள்ளது.

எத்தனை விமானங்கள் இந்தியா வந்துள்ளன என்பதை இந்திய விமானப்படை தெரிவிக்கவில்லை. எனினும் வீடியோ காட்சியின்படி நான்கு விமானங்கள் இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மெரிக்னக் விமானப் படைத்தளத்தில் இருந்து புறப்பட்ட ரபேல் விமானங்கள், எங்கும் நிற்காமல் நேராக 8 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பறந்து வந்து இந்தியாவிற்கு வந்து சேர்ந்தன. வானிலேயே எரிபொருள் நிரப்ப பிரான்ஸ் விமானப்படை மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் விமானப்படை விமானங்கள் துணை புரிந்தன.

இதனிடையே, 5 நாள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள விமானப்படைத் தளபதி பஹதூரியா ரபேல் பயிற்சி மையத்தைப் பார்வையிட்டார். அங்குள்ள விமானப்படை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய அவர், ரபேல் விமானங்களை இயக்க இந்திய விமானிகளுக்குப் பயிற்சியளிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments