கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி - பினராயி விஜயன் அறிவிப்பு

0 1117

கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக மத்திய அரசு கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

பெருந்தொற்று பாதிப்பால் மாநில அரசுகளுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள கேரள முதல்வர், கொரோனா தடுப்பூசிகளை, மாநில அரசுகளே வாங்கும் சூழல் ஏற்பட்டால், அதுகூடுதல் நிதிச்சுமைக்கு வழிவகுக்கும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments