மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தனது 7 வயது மகளுடன் மலை உச்சியில் இருந்து குதித்து தற்கொலை

0 4378
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தனது 7 வயது மகளுடன் தோரணமலை முருகன் கோவிலின் மலை உச்சியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தனது 7 வயது மகளுடன் தோரணமலை முருகன் கோவிலின் மலை உச்சியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

பால்வண்ணநாதபுரத்தை சேர்ந்த தேவபுத்திரனின் மனைவி லட்சுமி தேவி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் செவ்வாய்கிழமை காலை தனது 7 வயது மகள் மணிசாவுடன் தோரணமலை முருகன் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற லட்சுமி தேவி வீடு திரும்பவில்லை.

கணவர் மற்றும் உறவினர்கள் கோவிலில் எங்கு தேடியும் இருவரும் கிடைக்காத நிலையில், மலையின் வடதுபுறம் உச்சியிலிருந்து சுமார் 150 அடி ஆழத்தில் இருவரும் இறந்து கிடந்தது தெரியவந்தது. மனநலம் பாதிக்கப்பட்ட லட்சுமி தேவி மகளுடன் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments