புதுக்கோட்டையில் சம்மன் வழங்கச் சென்ற காவலர் மீது தாக்குதல்.. ஒருவர் கைது, மற்றவர்களுக்கு வலைவீச்சு..!

0 6840
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் சம்மன் வழங்க சென்ற காவலரை தாக்கியதாக ஒருவரை கைது செய்துள்ள போலீசார் தலைமறைவான மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் சம்மன் வழங்க சென்ற காவலரை தாக்கியதாக ஒருவரை கைது செய்துள்ள போலீசார் தலைமறைவான மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

அறந்தாங்கி மண்டிக்குளம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருக்கு விபத்து வழக்கு ஒன்றில் சம்மன் வழங்குவதற்காக அறந்தாங்கி காவல்நிலைய காவலர் ராமராஜன் சென்றுள்ளார்.

மண்டிக்குளம் கடைவீதியில் நின்றிருந்த சரவணனிடம் ராமராஜன் சம்மனை வழங்கிய நிலையில், அருகில் இருந்த துரைராஜ் எதற்கு சம்மன் வழங்குகிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இருவரிடையே ஏற்பட்ட தகராறில் காவலர் ராமராஜன், துரைராஜை தாக்கியதாகவும், பதிலுக்கு துரைராஜ் மேலும் இருவருடன் சேர்ந்து காவலர் ராமராஜனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அப்துல் கலந்தர் என்பவரை கைது செய்த போலீசார், தலைமறைவான துரைராஜ் உள்ளிட்ட இருவரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments