இருசக்கர வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

0 6011

இரு சக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதற்கு தயாரிப்பு  நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2013 - ஆம் ஆண்டில் இரு சக்கர வாகனம் மீது காஞ்சிபுரம் அரசு பேருந்து மோதிய விபத்தில் பெண் பல் மருத்துவர் 90 சதவீதம் ஊனம் ஏற்பட்டதால், கூடுதல் இழப்பீடு கோரிய மேல்முறையீடு வழக்கு விசாரணைக்கு வந்தது.

பூரண நலமுடன் இருந்திருந்தால், அவரது வருமானம் உயர்ந்திருக்கும் என்ற அடிப்படையில், இழப்பீட்டை 18 லட்சம் ரூபாயில் இருந்து, 1 கோடியே 49 லட்சத்து 80 ஆயிரத்து 548 ஆக உயர்த்தி நீதிபதிகள் நிர்ணயித்தனர்.

அந்த தொகையை 2013ஆம் ஆண்டிலிருந்து 7 சதவீத வட்டியுடன், 12 வாரத்தில் விசாரணை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டுமென உத்தரவிட்டனர். விபத்துகளில் உயிரிழப்பு அதிகரிக்க அதிவேகமே காரணம் என்று கூறிய நீதிபதிகள், வேகக்கட்டுப்பாட்டை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments