அமெரிக்காவில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கறுப்பின சிறுமி பலி

0 1373
அமெரிக்காவில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கறுப்பின சிறுமி பலி

மெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் கறுப்பின சிறுமியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

கொலம்பஸ் நகரில் ஆயுதம் தாங்கிய சிலர் ஒரு குடும்பத்தினரை மிரட்டுவதாக வந்த தகவலை தொடர்ந்து போலீசார் அங்கு சென்றதாக நகர காவல்துறை தலைவர் தெரிவித்தார்.

ஆனால் எதிர்பாராத விதமாக பதின்மவயது கறுப்பின சிறுமி போலீசாரின் தோட்டாக்களுக்கு பலியாகி விட்டதாக அவர் கூறினார்.

போலீசாரின் உடலில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததால், என்ன நடந்தது என்பது குறித்து கிரைம் பிராஞ்ச் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டதில் முன்னாள் போலீஸ் அதிகாரி குற்றவாளி என தீர்ப்பு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன் இந்த சம்பவம் நடந்திருப்பது பரபரப்பை அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments