கோவிஷில்டு கொரோனா தடுப்பூசி விலையை இருமடங்குக்கு மேல் உயர்த்தியது புனேவை சேர்ந்த சீரம் நிறுவனம்

0 2090
கோவிஷில்டு கொரோனா தடுப்பூசி விலையை இருமடங்குக்கு மேல் உயர்த்தியது புனேவை சேர்ந்த சீரம் நிறுவனம்

கோவிஷில்டு கொரோனா தடுப்பூசி விலையை புனேவை சேர்ந்த சீரம் நிறுவனம் இருமடங்குக்கு மேல் உயர்த்தி அறிவித்துள்ளது. 

மத்திய அரசுக்கு ஒரு டோஸ் 150 ரூபாய் விலையில் விற்கப்பட்டு வரும் நிலையில், மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் 600 ரூபாய்க்கும் விற்கப்படும் என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மத்திய அரசு உத்தரவிட்டுள்ளபடி உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 50 சதவீதம் மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும், 50 சதவீதம் மத்திய அரசுக்கும் வழங்கப்படும் என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மே ஒன்றாம் தேதி முதல் மாநில அரசுகளும், தனியார் மருத்துவமனைகளும் கொரோனா தடுப்பூசிகளை, தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments